கேரளாவில் அதிர்ச்சி - ஓடும் ரெயிலில் சக பயணிக்கு கத்திக்குத்து.!
man arrested for kill attack to co passanger at train in kerala
கேரளாவில் அதிர்ச்சி - ஓடும் ரெயிலில் சக பயணிக்கு கத்திக்குத்து.!
நமது அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் உள்ள ஷோரனூர் அருகே மரு சாகர் விரைவு ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் சக பயணியை தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் படி, ரயில்வே பாதுகாப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு குற்றவாளியைக் கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் குற்றவாளியிடம் விசாரணை நடத்திய போது அவர் பெயர் ஜியாத் என்பதுத் தெரியவந்தது.
மேலும், ஜியாத் ரயிலில் பெண் பயணிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் இதைப்பார்த்த மற்ற பயணிகள் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, ஆத்திரமடைந்த ஜியாத் பயணிகளில் ஒருவரைக் கத்தியால் குத்தியதும் தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரெயிலில் சக பயணியை ஒருவர் கத்தியால் குத்திய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for kill attack to co passanger at train in kerala