உ.பியில் அதிர்ச்சி - குழந்தை இல்லாத ஆத்திரம் - மனைவியை அடித்து கொன்ற கணவர்.! - Seithipunal
Seithipunal


உ.பியில் அதிர்ச்சி - குழந்தை இல்லாத ஆத்திரம் - மனைவியை அடித்து கொன்ற கணவர்.!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள, சஹாரன்பூர் சாரதா நகரைச் சேர்ந்தவர்கள் சந்தீப் - அல்கா தம்பதியினர். இவர்களுக்குத் திருமணமாகி பத்து ஆண்டுகளாகியும் இதுவரைக்கும் குழந்தை இல்லை. இதனால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

அதுமட்டுமல்லாமல், அல்கா சில நோய்களால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று அல்காவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக படுக்கையிலே மலம் கழித்துள்ளார். 

இதைப்பார்த்து ஆத்திரமடைந்த சந்தீப், அல்காவை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில், வலிதாங்க முடியாமல் அல்கா சத்தம் போட்டு அலறியுள்ளார். இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது அல்கா உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது, அல்காவின் உடல் அருகே சந்தீப் அமர்ந்திருந்தார். 

உடனே போலீசார் அவரை கைது செய்து, அல்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for kill wife in uttar pradesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->