டிவியில் கிரிக்கெட் பார்த்த வாலிபர் - துப்பாக்கியால் சுட்டுக் கொலை.!!
man died for gun shoot in uttar pradesh
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் நகரின் கஜூரி என்ற கிராமத்தில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் தனது தாத்தா உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கியையும் எடுத்துச் சென்றுள்ளார்.
அந்த வீட்டில் 18 வயது வாலிபர் முகமது கைப் என்பவர் சுவாரசியமாக டி.வி.யில் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி ஒன்றை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அவர் முன்பு தாம் கொண்டு சென்ற துப்பாக்கியை நீட்டிய சிறுவன் விளையாட்டு காட்டியுள்ளான்.

அப்போது எதிர்பாராத விதமாக சிறுவனின் விரல் விசையை அழுத்தியதால், துப்பாக்கியில் இருந்து குண்டு முகமது கைப் மீது பாய்ந்துள்ளது. இதில் முகமது கைப் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
இந்தச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில் தவறுதலாக துப்பாக்கி வெடித்து குண்டு பாய்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. இருப்பினும் முழு விசாரணைக்கு பின்னரே முழுத் தகவலும் தெரிய வரும் என்றுத் தெரிவித்தனர்.
English Summary
man died for gun shoot in uttar pradesh