மறந்தும் கூட காரில் ஏறியதும் இதை செய்யாதீர்கள்? - Seithipunal
Seithipunal


A \C கார் பயன்படுத்துபவரா நீங்கள் அப்படியானால் நீங்கள் இதை படித்து கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் உள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \C ஐ இயக்க வேண்டும்.A \C காரை பயன்படுத்தும் போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C ஐ இயக்கி ஜன்னலை மூடக்கூடாது.அப்படி மூடினால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இது குறித்து நிகழ்த்தப்பட்ட  பல அதிர்ச்சி தகவல்களை பார்க்கலாம்!

பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD, இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன.இது சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம் ஆகும் .

வீடுகளில் நிழலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400 முதல் 800 மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும்.அதே வேளையில் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000 மில்லி கிராம் வரையில் இருக்கும். இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40 மடங்கு அதிகம் என பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக கேன்சர், லுக்கூமியா, சிறு நீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

கார்களிலுள்ள ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைப்பதனால் அதிகப்படியான பென்சீன் வெளியேறிவிடும்.எனவே இதை மறக்காமல் பின்பற்றுங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பரிமாறிக்கொள்ளுங்கள். புற்று நோயில் இருந்து உங்களை இதன் மூலமும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Don't do this when you get in the car?


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->