தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய G.நேரு MLA!
G. Nehru MLA fulfills long-standing demand of the people of the constituency
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கோவிந்தசாலை பாரதிபுரம் மெயின் ரோடு பகுதியில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கோவிந்தசாலை பாரதிபுரம் மெயின் ரோடு (காமராஜர் சாலை முதல் ஜெயம் கொண்ட மாரியம்மன் திருக்கோவில் வரை ) சுமார் 500 மீட்டர் உள்ள சாலை குண்டும் குழியுமாக சேதம் அடைந்தும் சிதலமடைந்தும் இருப்பதாக அப்பகுதி மக்களிடம் இருந்து புகார் வந்தது.மேலும் கடந்த காலங்களில் பதவியில் இருந்தவர்கள் மக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்க முடியாமல் இருந்துள்ளனர்.
இந்தநிலையில் வந்த புகாரின் அடிப்படையிலும் மேற்கண்ட பகுதி மக்களின் நிலையை அறிந்து மண்ணின் மைந்தர் உருளையன்பேட்டை தொகுதி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களின் தொடரும் முயற்சியின் காரணமாக பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு மூலம் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் சரியாக நடைபெறுகிறதா என்றும் மழை காலங்களில் மழை நீர் சரியாக வெளியேறும் வகையில் வாட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதா என்றும் புதிதாக அமைக்கப்படும் சிமெண்ட் சாலை தரமாக உள்ளதாக என்று இன்று உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மாநிலம் மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவன தலைவருமான திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் மேற்கண்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு செயற்பொறியாளர் திரு.சீனிவாசன், நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயம்,பொதுப்பணித்துறை
இளநிலை பொறியாளர் சிவபிரகாசம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நகராட்சி அதிகாரிகளும்மேலும் அப்பகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்களும், நிர்வாகிகளும் பலர் உடன் இருந்தனர்.
English Summary
G. Nehru MLA fulfills long-standing demand of the people of the constituency