அதிரடியாக உயரும் காய்கறி, பழங்களின் விலை - காரணம் என்ன?
lory owners strike in karnataga
கர்நாடக லாரி உரிமையாளர்கள் டீசல் விலை மற்றும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தால் மாநிலங்களுக்கு இடையிலான, சரக்கு லாரிகள் சேவையில் பாதிப்பு ஏற்படும் என்றும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் கூறுகையில், ”தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா வழியாக மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தினமும் 4 ஆயிரம் லாரிகளும், அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு 3 ஆயிரமும் லாரிகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் இருந்து ஆடைகள், வெல்லம், தேங்காய், மஞ்சள், முட்டை உள்ளிட்ட பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பிற மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு மக்காச்சோளம், பருப்பு, பூண்டு, எண்ணெய், வெங்காயம் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.
அதிலும் குறிப்பாக தமிழ்நாடு – கர்நாடகா இடையே தினமும் 700 சரக்கு லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், 35% லாரிகளில் காய்கறிகள், பழங்கள் கொண்டு வரப்படுகிறது. ஆகவே, லாரிகள் வேலை நிறுத்தத்தினால், காய்கறி வரத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. தினசரி வரும் காய்கறி, பழங்கள் வரத்து குறைந்தால், விலைவாசி உயர வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.
English Summary
lory owners strike in karnataga