கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து - நொடியில் உயிர் பிழைத்த வாலிபர்.!
man injured for accident in kerala
பேருந்து நிலையத்தில் காத்திருந்தவள் மீது அரசு பேருந்து மீது விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி பேருந்து நிலையத்தில் காத்திருந்த இளைஞர் மீது பேருந்து மோதிய அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கேரளா மாநிலம் இடுக்கி கட்டப்பனா பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக விஷ்ணு என்பவர் காத்திருந்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று சாலையில் தாறுமாறாக வந்து பேருந்து நிலையத்தில் காத்திருந்த விஷ்ணு என்பவர் மீது மோதியுள்ளது.
ஆனால், நல்வாய்ப்பாக இந்த விபத்தில் லேசான காயங்களுடன் விஷ்ணு உயிர் தப்பினார். இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
man injured for accident in kerala