காதலியுடன் வீடியோ கால் பேசியபடி விஷம் குடித்து உயிரிழந்த காதலன் - உ.பியில் பயங்கரம்..!
man sucide in uttar pradesh
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னாவ் பகுதியை சேர்ந்தவர் அல்தாப். இவர் கடந்த 15 ஆண்டுகளாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் டெய்லராக பணிபுரிந்து வந்தார். அந்த சமயத்தில் அல்தாப்பும் உன்னாவ் மாவட்டத்தின் பீபர் ஹிரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இருவருக்கும் இடையே கடந்த மாதம் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அல்தாப் கடந்த மாதம் 23ம் தேதி தானேவில் உள்ள வாடகை வீட்டில் இருந்தபடி தனது காதலிக்கு வீடியோ கால் செய்து அவரிடம் பேசியபடியே விஷம் குடித்துள்ளார். மேலும், தனது கையை கத்தியால் வெட்டியுள்ளார். பின்னர், அந்த வீடியோவையும் பதிவு செய்து காதலிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அல்தாப் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் படி போலீசார் விரைந்து வந்து அல்தாப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, அல்தாப் தனது காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாராணை நடத்தி வருகின்றனர்.
English Summary
man sucide in uttar pradesh