மாவோயிஸ்ட் தாக்குதல்; வீரமரணம் அடைந்த 09 பாதுகாப்பு படையினர்..! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கரில் படையினர் சென்ற வாகனம் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தியதில் படைவீரர்கள் உட்பட 09 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியான குத்ருவில் வரும்போது ஐ.இ.டி., குண்டுவெடிப்பு மூலம் நக்சல்களால் பாதுகாப்பு படையினர் வாகனம் தகர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பலியானவர்கள் எட்டு பேர் தண்டேவாடா டிஆர்ஜி ஜவான்கள் மற்றும் ஓட்டுநர் உள்பட 09 பேர் என தெரியவந்துள்ளது.

தண்டேவாடா, நாராயண்பூர் மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் கூட்டு நடவடிக்கை ரோந்து சென்று விட்டு வரும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து, பஸ்தார் மண்டல ஐஜி சுந்தர்ராஜ் கூறியதாவது:
குத்ரு பெத்ரே சாலையில் வெடிகுண்டு பயன்படுத்தி மாவோயிஸ்டுகள் போலீஸ் வாகனத்தை வெடிக்கச் செய்தனர். இந்த ஆண்டின் முதல் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையை சனிக்கிழமையன்று அபுஜ்மத் நகரில் நடத்திவிட்டுத் திரும்பும் போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

ஜனவரி 03-ஆம் தேதி இந்நடவடிக்கை தொடங்கியது. தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகளை தேடும்பணி முழுவீச்சில் நடக்கிறது என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், சத்தீஸ்கரில், பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை அன்று  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினர் அதிரடி தாக்குதலில், நான்கு நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சத்தீஸ்கரில், கடந்த ஆண்டில் மட்டும் நக்சல் அமைப்பைச் சேர்ந்த 219 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், 800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maoist attack 09 security forces martyred


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->