குடிநீரால் நின்ற திருமணம் - கர்நாடகாவில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா மாவட்டம், ஜகல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். இவருக்கும் தும்கூர் மாவட்டம் சிரா பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது.

இதற்கு முந்தைய நாள் இரவு ஹிரியூர் நகரில் பெங்களூரு சாலையில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மணமகன், மண மகளின் உறவினர்கள், நண்பர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் இரவு விருந்து வழங்கப்பட்டது. இந்த விருந்து முடியும் தருவாயில் சிலர் சாப்பிடுவதற்காக அமர்ந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு கேட்டரிங் ஊழியர்கள் முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று கூறி இரு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு தொடங்கிய இந்த தகராறு நேற்று காலை வரை நீடித்தது. பலரும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இருதரப்பினரும் சமாதானம் அடையவில்லை. ஒரு கட்டத்தில் மணமகனும், மணமகளும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். 

அவர்களை உறவினர்கள் சமாதானம் செய்ய முயன்றனர். இருப்பினும் அவர்கள் சமாதானம் அடைவதாக தெரியவில்லை. மணமக்களே சண்டையிட்டதால் திருமணம் நிறுத்தப்பட்டது. குடிநீர் வழங்கவில்லை என்று கூறி தகராறு ஏற்பட்டதால் திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

marriage stop in karnataga for no water provide


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->