அதிர்ச்சி! ரயில் பாலத்தில் போட்டோஷூட்! திடீரென வந்த ரயில்! 90 அடி பள்ளத்தில் குதித்த தம்பதி! - Seithipunal
Seithipunal


ரயில் பாலத்தில் போட்டோஷூட் எடுத்துக் கொண்டிருக்கும் போது ரயில் வந்ததால் பதறிய திருமண தம்பதிகள் கீழே குதித்த சம்பவம் நடைபெற்று உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் குறுகலான ரயில் மேம்பாலம் உள்ளது. இந்த ரயில் மேம்பாலத்தின் ட்ரோன் மூலம் ஒரு புதுமண தம்பதி போட்டோசூட் நடத்தியுள்ளனர். விதவிதமான முறையில் போட்டோஷூட் எடுத்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

அப்போது ரயில்வே தடத்தில் திடீரென ரயில் வந்ததால், பயத்தில் 90 அடி பள்ளத்தில் கணவன் மனைவி இருவரும் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலத்தில் இருந்து புதுமண தம்பிகள் குதிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

ரயில் ஓட்டுநர் குறைவான வேகத்தில் ரயிலை ஓட்டி வந்ததால் புதுமணத் தம்பதிகளை பார்த்து உடனடியாக ரயிலை நிறுத்தினார். ஆனால் ரயில் நிற்பதற்கு முன்பாக அவர்கள் இருவரும் பாலத்தில் இருந்து குதித்துள்ளனர்.

கீழே விழுந்த திருமண தம்பதிகளை நண்பர்கள் இணைந்து மீட்டனர். படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்திவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

married couple jumped off a train while taking a photoshoot on a railway bridge


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->