மாணவர்களே இன்று நீட் தேர்வு.!! இதையெல்லாம் மறந்தும் கூட செய்யாதீங்க.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 5:20 மணி வரை நடைபெறுகிறது. நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்கின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1.5 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்க உள்ளனர். 

இதன் காரணமாக நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் முழு சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுவார்கள். என் காரணமாக நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ மாணவிகள் முழுக்கை ஆடைகளை அணியக்கூடாது. 

மாணவிகள் தலையில் பூ வைக்கக்கூடாது, தங்க நகை ஆபரணங்கள் அணியக்கூடாது. தேர்வு அறைக்குள் செல்போன் உட்பட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் எதையும் எடுத்துச் செல்ல கூடாது. தண்ணீர் எடுத்துச் செல்லும் பாட்டில்கள் கூட தெளிவாகத் தெரியும் வகையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் தேர்வு அறைக்குள் காலனி அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mbbs neet exam today all over India


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->