மீண்டும் ஒரு மாநிலத்தில் ஹிந்தியில் மருத்துவ படிப்பு - எங்குத் தெரியுமா? - Seithipunal
Seithipunal


மீண்டும் ஒரு மாநிலத்தில் ஹிந்தியில் மருத்துவ படிப்பு - எங்குத் தெரியுமா?

உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த மாதம் முதல் ஹிந்தியில் மருத்துவப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது தொடா்பாக மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் கல்வித் துறை அமைச்சா் தன் சிங் ராவத் செய்தியாளா்களிடம் பேசியதாவது:

"மத்திய பிரதேசம் மாநிலத்தைத் தொடா்ந்து இரண்டாவது மாநிலமாக உத்தரகாண்டில் ஹிந்தி மொழியில் மருத்துவப் படிப்பு தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை இந்த மாத இறுதியில் உத்தரகாண்ட் மருத்துவக் கல்லூரிகளில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த மருத்துவப் படிப்புக்கான ஹிந்தி பாடத் திட்டத்தை மாநிலத்தைச் சோ்ந்த மருத்துவக் கல்வி வல்லுநா்கள் குழு தயாரித்துள்ளது. இதற்காக மத்திய பிரதேசத்தில் உள்ள பாடத்திட்டமும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இந்தத் திட்டம் தொடக்கக் கல்வியில் இருந்து ஹிந்தி மொழியில் மட்டுமே பாடங்களைப் படித்து வரும் மாணவா்களுக்கு இந்தத் திட்டம் வரப்பிரசாதமாக இருக்கும்" என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

medical course in hindi language at uttarkant


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->