மருத்துவ மாணவன் தற்கொலை; கல்லூரி நிர்வாகம் மீது புகாரளித்துள்ள குடும்பத்தினர்..! - Seithipunal
Seithipunal


மருத்துவ மாணவன் ஒருவர் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் கொடா மாவட்டத்தில் கொடா மருத்துவ கல்லூரியில் 3-ஆம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்தவர் 28 வயதுடைய சுனில் பைர்வா. அவர் தங்கியிருந்த விடுதி அறையில் மின் விசிறியில் நேற்றிரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த விவரம் அறிந்ததும் மகாவீர் நகர் காவல் நிலைய போலீசார், விடுதிக்கு சென்று சுனிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் தற்கொலை குறிப்பு ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அதில், பெற்றோரின் கனவை நிறைவேற்ற முடியாத இயலாமையை வெளிப்படுத்தி சுனில், மன்னிப்பை கோரியிருக்கிறார்.

இந்த தற்கொலை சம்பவம் பற்றி அறிந்ததும், இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள், முதல்வர் அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், சுனிலின் தந்தை கஜோத்மல் கூறும்போது, ''நீட் தேர்வை எழுதி முடித்து பின்பு, 2019-20-ம் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்பில் படிக்க அனுமதி கிடைத்தது.

எனினும், முதலாம் ஆண்டில் உள்நோக்கத்துடன் கல்லூரி நிர்வாகத்தினர், சுனிலை தேர்ச்சி பெற செய்யவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார். இதனை எதிர்த்து நாங்கள் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தில் முறையீடு செய்தோம். இதன்பின்னர் நடந்த மறுமதிப்பீட்டில், 7 முதல் 8 மாதங்களுக்கு பின்னர் சுனில் தேர்ச்சி பெற்றார் என அறிவிக்கப்பட்டது.'' என கூறியுள்ளார்.

அத்துடன் அவர் கூறியதாவது; 02-ஆம் ஆண்டில் தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டான். எனினும், 03-ஆம் ஆண்டில் தேர்வில் மோசடி செய்ததற்காக பிடிபட்டான். இதனால், அவனுடைய 02 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, ஒன்றரை ஆண்டுகளாக கல்லூரிக்கு வர சுனிலுக்கு தடை விதிக்கப்பட்டது என கூறியுள்ளார்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த விடயம் பற்றி கல்லூரி நிர்வாகத்திடம் பேச சுனில் முற்பட்டபோது, வருத்தப்படும் வகையிலான சம்பவம் நடந்துள்ளதோடு, சுனிலை நிர்வாகம் திட்டி, திருப்பி அனுப்பி உள்ளதக கூறப்படுகிறது. இதனால், கடந்த 03 மாதங்களாக சுனில் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்.  இதனால், இந்த துயர முடிவை அவர் எடுத்துள்ளதாக சுனிலின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

அத்துடன், இந்த கல்லூரியில் எல்லா மாணவர்களும் சம அளவில் நடத்தப்படுவதில்லை என மூத்த மாணவரான கமல் என்பவர் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், சுனிலின் குடும்பத்தினர் அளிக்கும் புகார் அடிப்படையில், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தற்கொலைசம்பவம் பற்றி விசாரிக்க, 05 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் சங்கீதா சக்சேனா கூறியுள்ளார்.
 

Note;- தற்கொலை ஒருபோதும் எதற்கும் தீர்வாகாது. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால், அவற்றை எதிர்கொள்ள உங்களுக்கு உதவி தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். தயவுசெய்து பின்வரும் உதவி எண்களை அழைக்கவும்:

தமிழக சுகாதார சேவை உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044-24640050

இந்த எண்கள் மூலம், மனநல ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குவார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Medical student Dies By Suicide In Rajasthan Family Blames College Management


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->