உலகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து! பதறவைக்கும் Crowd Strike தொழில்நுட்பக் கோளாறு! - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளம் பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்களுக்கு இன்று புளூ ஸ்கிரீன் (Blue Screen of Death) பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விண்டோஸ் இயங்குதளத்தின் கிரவுட்ஸ்டிரைக் சென்சார் வெர்ஷனில் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மைக்ரோசாப்ட் சேவைகளில் பிரச்சினை ஏற்பட்டதை கிரவுட்ஸ்டிரைக் உறுதிப்படுத்தி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த பிரச்னையை சரி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதுவரை பயனர்கள் தாங்களாகவே இதனை சரி செய்ய முயற்சிக்க வேண்டாம் என்றும் அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Crowd Strike தொழில்நுட்பக் கோளாறால் மைக்ரோசாஃப்ட் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் 170 விமானங்களும், உலகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 90% விமானங்கள் இயக்கப்படவில்லை. சென்னைக்கு வரவேண்டிய 15 விமானங்கள் தாமதமாக வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்பட இருந்த 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளது.

கம்ப்யூட்டர் மூலம் போர்டிங் பாஸ் வழங்குவதில் பிரச்சினை காரணமாக கைகளால் போர்டிங் பாஸ் எழுதி கொடுக்கப்படுகிறது. கவுண்டர்களில் விமான நிறுவனங்கள் கூடுதல் ஊழியர்களை நியமித்து கைகளால் எழுதப்பட்ட போர்டிங் பாஸ்களை வழங்கி வருகிறது.

போர்டிங் பாஸ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால், விமான நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எப்போது இந்த நிலைமை சீராகும் என்று விமான நிறுவனங்கள் முறையான அறிவிப்புகள் வெளியிடாததால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Microsoft Crowd Strike issue Chennai and world wide Airport flight cancel


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->