அதிர்ச்சியில் பொதுமக்கள்... பெட்ரோல் டீசல் விலையைத் தொடர்ந்து பால் விலையும் கிடுகிடு உயர்வு.!
milk price increase in karnataga
கர்நாடகாவில் கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வைக் கண்டித்து பா.ஜ.க. தீவிர போராட்டம் நடத்தியது. இதற்கு பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, மாநிலத்தின் முதலமைச்சர் சித்தராமையா நிதி ஆதாரங்களை திட்டும் நோக்கத்தில் இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றுத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நேற்று கர்நாடக பால் கூட்டமைப்பு திடீரென பால் விலையை ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் என்று உயர்த்தியுள்ளது.
இந்த விலை உயர்வை ஈடுசெய்யும் பொருட்டு அரை லிட்டர், ஒரு லிட்டர் பால் பாக்கெட்டுகளில் கூடுதலாக 50 மில்லி பால் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது ஒரு லிட்டர் பால் (நீல நிற பாக்கெட்) ரூ.42-ல் இருந்து ரூ.44 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற வகை பால் பாக்கெட்டுகளின் விலையும் இதே போல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த பால் விலை உயர்வு நாளை அதாவது இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்தப் பால் விலை உயர்வுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து பால் விலையையும் உயர்த்தி உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
milk price increase in karnataga