தெலுங்கானாவில் லாரி மோதிய கோர விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 2 லட்சம் நிவாரணம்! பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம் லாரி மோதிய விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி.

தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் நேற்று மாலை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மினி வேணும், அதிவேகத்தில் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளது.

இந்த கோர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் பிரதமர் மோடி அவர்கள் இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MiniVan lorry accident PM Modi announced Rs two lakh relief for families


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->