காணாமல் போன சிறுமி காயங்களுடன் நிவாரண முகாமில் சடலமாக மீட்பு; பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம்..!
Missing girl in Manipur recovered with injuries on her body
மணிப்பூர் மாநிலம் சூரசந்த்பூரில் உள்ள லான்வா டிடி பிளாக் நிவாரண முகாம் வளாகத்தில் 09 வயது சிறுமி கழுத்து மற்றும் உடலின் பிற பகுதிகளில் ரத்தக் காயங்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு சடலமாகமீட்கப்பட்ட சிறுமி நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில் காணாமல் போயுள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு சிறுமி சாலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமி காணாமல் போனதில் இருந்து அவளது பெற்றோரும், முகாமில் வசிப்பவர்களும் தீவிர தேடுதலைத் தொடங்கியதில், நிவாரண முகாமின் வளாகத்திற்குள் காயங்களுடன் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அத்துடன், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்ப்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

2023 முதல் மணிப்பூரில் இரண்டு சமூகளுக்கிடையே நடந்து வரும் கலவரத்தில் 250 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், கடந்த வருட இறுதியில் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் கலவரம் தீவிரமடைந்ததை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 09-ஆம் தேதி ஆளும் பாஜக முதல்வர் பைரன் சிங் பதவி விலகினார். இதைஎடுத்துஅங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
குறித்த 09 வயது சிறுமியின் மரணம் குறித்து முன்னாள் முதல்வர் பைரன் சிங்,தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; இந்த முட்டாள்தனமான செயல் மனிதகுலத்திற்கு எதிரான ஒரு மிகப்பெரிய குற்றமாகும், மேலும் குற்றவாளிகள் தாமதமின்றி நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
Missing girl in Manipur recovered with injuries on her body