தக் லைப் படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும்? - மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு..!
thug life movie first song update
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இந்தப் படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நடிகர் அலி பசல் நடிக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும். இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜூன் 5-ந் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பரில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் 'தக் லைப்' திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 'தக்ஸ்டர்ஸ்' எனும் இந்தப் பாடலை கமல்ஹாசன் எழுதியுள்ளார்.
English Summary
thug life movie first song update