முகத்துவாரத்தில் விழுந்தத கப்பல் கதவுகள் அகற்றப்படவேண்டும்.. சம்பத் MLA கோரிக்கை!
The ships gates that fell into the estuary must be removed Sampath MLAs request
சிரிய ரக கப்பல் புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து வெளியேறும் போது அதன் கதவுகள் இரண்டும் உடைந்து முகத்துவாரத்தில் விழுந்தததுள்ளதால் மீன்பிடிக்க தொழிலுக்கு சென்று முகத்துவாரம் திரும்பிய 11 போட் சேதம் அடைந்தது என்று முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு சம்பத் கூறினார்.
பூஜ்யம் நேரத்தில் முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு சம்பத் அவர்கள் பேசியது கடந்த 27.02.25 அன்று மும்பையை சேர்ந்த அதாவது பாஜ் என்று அழைக்கப்படும் சிரிய ரக கப்பல் புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து வெளியேறும் போது அதன் கதவுகள் இரண்டும் உடைந்து முகத்துவாரத்தில் விழுந்தது. அது முழுமைக மணலில் முழுகாமல் வெளியிலேயே இருந்தது இந்த விஷயம் தெரியாமல் மீன்பிடிக்க தொழிலுக்கு சென்று முகத்துவாரம் திரும்பிய 11 போட் சேதம் அடைந்தது.
இந்த போட்டுகவலை தலை 8 லட்சம் செலிவிட்டு சரி செய்தனர். இந்த தகவல் மற்றவர்களுக்கு பரவியதை தொடர்ந்து போட் உரிமையாளர் சங்கம் யாரும் மீன் பிடிக்க போக கூடாது என மறியல் செய்தனர். இதனால் கடந்த 27.02.25 முதல் போட் உரிமையாளர் மீன் பிடி தொழிலுக்கு செல்லவில்லை. இதனால் மீன் பிடி சீசன் காலத்தில் தொழில் செய்ய முடியும் வருமானம் இல்லாமல் சிரமப் படுகின்றனர்.
இது குறித்து அரசின் சார்பில் எந்த ஒரு அதிகாரியும் ஆய்வு செய்ய வில்லை. அரசின் கவனத்திற்கு வந்ததா என்று கூட தெரியவில்லை. இதனால் ஒவ்வொரு போட்டிற்க்கும் இழப்பீடும் தொழிலுக்கு செல்லாமல் இருந்த போட்டுகளுக் நஷ்ட ஈடும் வழங்க வேண்டும். அந்த இரும்பு கதவுகளை முகத்துவாரத்தில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனவர்கள் மிகவும் கொதிப்படைந்து உள்ளனர் அவர்கள் மிகப் பெரிய போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன் அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது இந்த அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
English Summary
The ships gates that fell into the estuary must be removed Sampath MLAs request