அதர்வாவின் 'இதயம் முரளி' படத்தின் முதல் பாடல் 'இதயா... நீ காதல்....' வெளியானது....!!
adharva idhayam murali movie first song idhaiyaa released
நடிகர் முரளியின் முதல் மகன் நடிகர் அதர்வா 'பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போத நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கிய 'டிஎன்ஏ' படத்தில் நடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கி வரும் 'பராசக்தி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவரது நடிப்பில் உருவான் 'டிஎன்ஏ' திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்தில் 'இதயம் முரளி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதர்வாவுடன் இணைந்து ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளார்.
ஏற்கனவே தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நடிகர் அதர்வாவின் அப்பாவான முரளி 'இதயம்' படத்தில் நடித்து பிரபலமானார்.
முரளிக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதைப்போல் அதர்வாவிற்கும் 'இதயம் முரளி' திரைப்படம் வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதர்வாவின் 'இதயம் முரளி' படத்தின் டைட்டில் டீசர் 1 கோடி பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
இந்நிலையில் 'இதயா' எனத்தொடங்கும் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.இது தற்போது வலைத்தளங்களில் பரவி வருகிறது.
English Summary
adharva idhayam murali movie first song idhaiyaa released