காணாமல் போன கிளி : கண்டுபிடித்து கையில் கொடுத்தவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த குடும்பம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம், துமகுரு பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த சாம்பல் நிறம் கொண்ட  இரண்டு கிளிகளை வளர்த்து வந்தனர். அதில் ஒரு கிளி கடந்த 16-ஆம் தேதி திடீரென காணாமல் போனது. 

இதனை அடுத்து அவர்கள் தங்கள் வளர்த்து வந்த ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த சாம்பல் நிறம் கொண்ட ருஸ்தாமா என்ற காணாமல் கிளியை கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.50 ஆயிரம் பரிசளிக்கப்படும் என்று துண்டு பிரசுரங்கள் வாயிலாக   அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், ஸ்ரீனிவாசன் என்பவர் தனது வீட்டு வாசலில் அந்த சாம்பல் நிற கிளியை பத்திரமாக பாதுகாத்து வந்துள்ளார். அப்போது‌ இந்தக் கிளியை வளர்த்து வந்தவர்கள் வெளியிட்ட துண்டு பிரசுரத்தை பார்த்தவுடன், அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

தங்களது காணாமல் போன கிளியைக் கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு, ரூ.50 ஆயிரம் பரிசளிக்கப்படும் என்று தெரிவித்த அந்த தம்பதியினர், தற்போது மீண்டும் கிளி கையில் கிடைத்த மிகுந்த சந்தோஷத்தில், கிளியை கண்டுபிடித்துக் கொடுத்த ஸ்ரீனிவாசனுக்கு ரூ.85 ஆயிரத்தைப் பரிசளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Missing parrot CASE The family pleasant surprise to the person


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->