பஞ்சாப்பில் கொடூரம் : குழந்தை இல்லாததை கேலி செய்த முதியவர் 3 பேர் கொலை.!!
mocked for not having children three old man killed in punjab
பஞ்சாப்பில் கொடூரம் : குழந்தை இல்லாததை கேலி செய்த முதியவர் 3 பேர் கொலை.!!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா நகர் நியூ ஜானக்புரி பகுதியைச் சேர்ந்தவர்கள் சமன் லால்-சுரீந்தர் கவுர் தம்பதியினர். இவர்கள் வீட்டுக்கு பக்கத்தில் ராபின் என்ற முன்னா என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.
இவர்களுக்கு திருமணம் நடந்து ஐந்து ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதனை சொல்லிக்கட்டி சுரீந்தர் கவுர் அடிக்கடி, முன்னாவை எரிச்சலடைய செய்து வந்துள்ளார்.
இதனால், ஆத்திரம் அடைந்த முன்னா சுரீந்தரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், சுரீந்தர் உள்பட அவர்கள் வீட்டில் இருந்த முதியவர்கள் 3 பேரும் வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாவை கைது செய்து விசாரணை செய்ததில், அவர் நடந்த செயலை ஒப்பு கொண்டார். மேலும் அவர், தனக்கு திருமணம் நடந்து 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை.
அதனால், சுரீந்தர் இதுபற்றி அண்டை வீட்டுக்காரர்கள் முன்னிலையில் கூறி கேலி செய்து வந்துள்ளார். இதனால், சுரீந்தரை கொலை செய்ய முடிவு செய்து, மூன்று பேரையும் கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார், முன்னாவிடம் இருந்து வீடியோ கேமிரா, 7 கேசட்டுகள், மொபைல் போன் ஒன்று, சில ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி உள்ளனர். அவை அனைத்தும் அந்த வீட்டில் இருந்து திருடப்பட்டு உள்ளன. இந்த வழக்கில் முன்னாவுக்கு மூன்று நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
English Summary
mocked for not having children three old man killed in punjab