புதுச்சேரி பல்கலையில் திரையிடப்பட்ட மோடியின் பி.பி.சி ஆவணப்படம்.. போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


இந்திய பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த பொழுது ஏற்பட்ட கலவரத்தில் குறித்து பிபிசி ஆவணப்படம் ஒன்று வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடியின் ஆவண படத்தை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்தது. இந்த ஆவணப்படம் டெல்லியில் உள்ள ஜெ.என்.யு பல்கலை கழகத்தில் திரையிட்ட பொழுது மின்சாரம் துண்டிக்கப்பட்டு கலவரம் ஏற்பட்டது.

இந்த நிலையில் மோடியின் ஆவண படத்தை இந்திய மாணவர்கள் சங்கம் உட்பட பல்வேறு மாணவர் அமைப்புகள் சேர்ந்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நேற்று திரையிட இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக்கழக வளாகத்தில் ஆவண படத்தை திரையிடக்கூடாது என அறிவித்தது. 

அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று மாலை 3 மணி முதல் மின்சாரம் மற்றும் இணையதள வசதி துண்டிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட ஆவணப்படம் திரையிடப்பட உள்ளதாக தகவல் அறிந்த புதுச்சேரி போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு தோற்றுக் கொண்டது. இதனை அடுத்து மாணவர்களின் விடுதி அறையில் ஆவணப்படத்தை திரையிடுவதாக மாணவர் அமைப்பு அறிவித்தது. அதன் அடிப்படையில் மாணவர் அமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களின் செல் போன், லேப்டாப் வழியாக மோடியின் பிபிசி ஆவணப்படத்தை பார்த்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi BBC documentary screened at Puducherry University


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->