''பவன் கல்யாண் ஒரு புயல்'' - புகழ்ந்த மோடி
modi praises pawan kalyaan
18வது மக்களவை தேர்தல் முடிந்த நிலையில், பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றது, இதனால் டெல்லியில் உள்ள பழைய பார்லிமென்ட் மாளிகையின் சென்ட்ரல் ஹாலில், பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடியின் பெயர் அணைத்து தலைவர்களாலும் முன்மொழியப்பட்டது. பிரதமர் மோடி சபையில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் பொது ஆந்திர சூப்பர் ஸ்டாரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாணை நரேந்திர மோடி பாராட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி, தனது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் பாராட்டினார், அடுத்து பவன் கல்யாணை நோக்கி, இது காற்று அல்ல, புயல் என்று கூறினார்.
ஆந்திராவில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்கள் ஒன்றாக நடந்தன. பவன் கல்யாணின் கட்சியான ஜனசேனா ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் மிகபெரிய வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றிக்குப் பிறகு பவன் ரசிகர்கள் அவருக்கு மிகுந்த மரியாதை அளித்துள்ளனர். வெற்றிக்குப் பிறகு பவன் கல்யாண் பிரதமர் மோடியை சந்தித்து ஆசி பெற்றார்.
வெற்றி பெற்ற பிறகு நரேந்திர மோடியை பவன் கல்யாண் சந்தித்தார். பவன் கல்யாண்னுடன் அவரது மனைவி அன்னா லெஷ்னேவா மற்றும் மகன் அகிரா நந்தனும் உடன் இருந்தனர். நடிகரின் மகன் அகிராவை ஊக்கப்படுத்தினார் மோடி. என்டிஏ நாடாளுமன்றக் கட்சித் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், ஜூன் 9ஆம் தேதி மாலை அவர் பிரதமராகப் பதவியேற்பார்.
English Summary
modi praises pawan kalyaan