"நாங்கள் மோடியின் குடும்பம்" என்பதை தயவுசெய்து நீக்குங்கள் - மோடி வேண்டுகோள் !! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, "மோடி கா பரிவார்" என்ற வாசகத்தை X போன்ற சமூக வலைதளங்களில் இருந்து நீக்குமாறு சமூக வலைதள தனது ஆதரவாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். "மோடி கா பரிவார்" என்று எழுதிய ஆதரவாளர்களின் அன்புக்கு மிக்க நன்றி என தெரிவித்துள்ளார். 

மேலும் Prime Minister Office தனது சமூக ஊடக பக்கத்தில் புகைப்படத்தை மாற்றியுள்ளது. முன்பு இருந்த புகைப்படத்துக்கு பதிலாக தற்போது பிரதமரின் புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது. அதில் சுயவிவர அட்டையில் பிரதமர் மோடி அரசியல் சாசனத்திற்கு வணக்கம் செலுத்துவது போன்ற புகைப்படம் இடபட்டுள்ளது.

மக்களவை தேர்தல் பிரசார சமயத்தில், ​​நாடு முழுவதும் உள்ள மக்கள், என் மீது உள்ள பாசத்தின் வெளிப்பாடாக, 'மோடி கா பரிவார்' என, தங்களது சமூக வலைதளங்களில் சேர்த்துள்ளனர் என, பிரதமர் மோடி, தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 "இது எனக்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்தது. இந்திய மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மையை வழங்கியுள்ளனர்,  நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஆணையை எங்களுக்கு வழங்கியுள்ளனர். இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் உங்கள் சமூக ஊடக சொத்துக்களில் இருந்து 'மோடி கா பரிவார்' என்ற வாசகத்தை நீக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். காட்சிப் பெயர் மாறலாம் ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒரே குடும்பமாக நமது பிணைப்பு வலுவானது மற்றும் என்றும்  தகர்க்க முடியாதது" என்று பதிவிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு, பிரதமர் அலுவலகத்தின் புகைப்படமும் மாற்றப்பட்டுள்ளது. DPயில் பிரதமர் நரேந்திர மோடி அரசியல் சாசனத்திற்கு தலைவணங்குவது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi requests to people to remove the tag


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->