ராமன் இருந்ததை நம்பாதவர்கள் ராவணனை மேற்கோள் காட்டுகிறார்கள்!
Modi said who do not believe Rama existed quote Ravana
குஜராத் மாநிலத்தின் இரண்டாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் உச்சகட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குஜராத் மாநிலத்தின் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் உள்ள கலோல் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தன்னை மோசமான வார்த்தைகள் கொண்டு விமர்சிப்பதில் காங்கிரஸ் தலைவர்கள் இடையே போட்டி நடப்பதாக பேசியுள்ளார்.
இது தேர்தலில் பாஜகவிற்கு வாக்களிப்பதன் மூலம் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பொதுமக்களை மோடி கேட்டுக்கொண்டார். கடவுள் ராமன் இருப்பதை நம்பாதவர்கள் ராமாயணத்திலிருந்து ராவணனை மேற்கோள் காட்டி பேசி வருகின்றனர். மோசமான வார்த்தைகளால் விமர்சித்தவர்கள் அதற்காக வருத்தம் கூட தெரிவிக்காததை நினைத்து ஆச்சரியமாக இருக்கிறது என பேசி உள்ளார்.
சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அனைத்து தேர்தலிலும் பிரதமர் மோடியின் புகைப்படத்தை காண்பித்து பாஜகவினர் வாக்கு சேகரிக்கின்றனர். பிரதமர் மோடிக்கு என்ன ராவணன் போல் நூறு தலைகளா உள்ளது? என மல்லிகார்ஜுனா கார்கே விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Modi said who do not believe Rama existed quote Ravana