திடீர் திருப்பம்! 200க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள்! ரேணுகா சாமி கொலை வழக்கு! - Seithipunal
Seithipunal


கர்நாடகா : கொலை செய்யப்பட்ட ரேணுகா சாமி நடிகை பவித்ரா கவுடாவிற்கு 200க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆபாச வார்த்தைகள் இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பியது தெரியவந்துள்ளது.

ரேணுகா சாமி கொலை வழக்கு கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கு தொடர்பாக நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா மற்றும் ரசிகர் மன்றத்தினர் கூலிப்படையினர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் நடிகை பவித்ர கவுடா மற்றும் தர்ஷனுக்கு எதிரான வலுவான ஆதாரங்களை  சிறப்பு விசாரணை அதிகாரிகள் தொடர்ந்து சேகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொலை செய்யப்பட்ட ரேணுகா சாமி செல்போனை போலீஸ்  தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நீதிமன்றம் அனுமதியுடன் ரேணுகா சாமி பயன்படுத்திய செல்போன் எண்ணை மற்றொரு சிம்கார்டு வாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரேணுகா சாமி பவித்ரா கவுடாவிற்கு  200க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆபாச வார்த்தைகள் இன்ஸ்டாகிராம் மூலமாக அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பவித்ரா கவுடா அந்த கணக்கை முடக்கிய பின்பும் ரேணுகா சாமி போலி கணக்கை தொடங்கி மீண்டும் பவித்ரா கவுடாவிற்கு ஆபாச தகவல்கள் அனுப்பியது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் பவித்ராவின் செல்போனையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

More than 200 porn videos Renuka Sami murder case


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->