4 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை..! போலீசார் தீவிர விசாரணை...! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் நான்கு குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள மாண்ட்லி ஸ்டேஷன் பகுதியை சேர்ந்தவர் ஜெதாராம். இவரது மனைவி ஊர்மிளா (27). இவர்களது குழந்தைகள் பாவனா (8), விக்ரம் (5), விமலா (3), மனிஷா (2). இந்நிலையில் ஜெதாராம் வேலைக்காக ஜோத்பூருக்கு சென்றுள்ளார். அப்பொழுது வீட்டில் இருந்த ஊர்மிளா, தானிய ட்ரம்மில் நான்கு குழந்தைகளை வைத்து அதனை மூடி குழந்தைகளை கொன்றுள்ளார்.

பின்பு ஷர்மிளாவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து ஷர்மிளாவும் குழந்தைகளும் வீட்டை விட்டு வெளியே வராததால், சந்தேகம் அடைந்து உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது ஷர்மிளா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். மேலும் 4 குழந்தைகளும் தானிய டிரம்மில் உயிரிழந்து கிடந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ஷர்மிளாவின் உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த ஐந்து பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் முதற்கட்ட விசாரணையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக குழந்தைகளை கொன்றுவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும் இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother commits suicide after killing her four children in rajasthan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->