மாமனார் முகத்தில் வண்ணப்பொடி பூசிய மருமகளை கண்டித்த மாமியார்; தற்கொலை செய்துகொண்ட மருமகள்..!
Mother in law condemns daughter in law for smearing colored powder on her father in laws face daughter in law commits suicide
உத்தர பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ள திரிகால்பூர் கிராமத்தை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், ஹோலி பண்டிகையின் போது தனது மாமனாரின் முகத்தில் வண்ணப்பொடியை பூசியுள்ளார். இதனை, அவரது மாமியார் கண்டித்துள்ளார். இதன் காரணமாக மனமுடைந்த பெண் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையறிந்த உறவினர்கள் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்த்துள்ளார்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Mother in law condemns daughter in law for smearing colored powder on her father in laws face daughter in law commits suicide