6 குழந்தைகளுக்கு தாயானவள் பிச்சைக்காரனுடன் ஓட்டம்..காவல்நிலையத்தில் கதறிய கணவன்!
Mother of 6 children runs away with beggar Husband screams at police station
எருமை மாட்டை விற்று வைத்திருந்த பணத்துடன் தன் மனைவி வீட்டை விட்டு பிச்சைக்காரனுடன் ஓடிப்போனதாக காவல்நிலையத்தில் கணவர் புகார் அளித்துள்ள சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டம் ஹர்பால்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜு,தனது மனைவி ராஜேஸ்வரி 6 குழந்தைகள் மற்றும் அவரது கணவனை தவிக்கவிட்டு மயமாகியுள்ளாள். கடந்த 3-ம் தேதி வீட்டை விட்டுச் சென்ற ராஜேஸ்வரி, அதன்பின் வீடு திரும்பவில்லை என்றும் தனது மனைவியை பிச்சைக்காரர் ஒருவர் கடத்திச் சென்றிருப்பதாக கணவர் ராஜு புகார் அளித்தார்.பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவின் கீழ் அவரது கணவர் புகார் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நான்ஹே பண்டிட் (வயது 45) என்ற பிச்சைக்காரர் சில சமயம் பக்கத்து வீடுகளில் பிச்சை எடுக்க வருவது வழக்கம் என்றும் அப்போது என் மனைவி ராஜேஸ்வரிக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த புகார் மனுவில் கூறியிருப்பது;கடந்த 3-ம் தேதி பிற்பகல் 2 மணியளவில் என் மனைவி ராஜேஸ்வரி, மார்க்கெட்டுக்கு சென்று துணிகள் மற்றும் காய்கறிகள் வாங்கி வருவதாக மகளிடம் கூறிவிட்டு சென்றார் என்றும் அதன்பின் வீடு திரும்பவில்லை என்றும் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ள கணவர் எருமை மாட்டை விற்று வைத்திருந்த பணத்துடன் என் மனைவி வீட்டை விட்டு சென்றுவிட்டார்என்றும் அவரை நான்ஹே பண்டிட் அழைத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகம் உள்ளது என்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பெண்ணை கண்டுபிடித்து மீட்ட நிலையில் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அவரை கடத்தி சென்றதாக கூறப்படும் நான்ஹே பண்டிட்டை தேடி வருகின்றனர்.
English Summary
Mother of 6 children runs away with beggar Husband screams at police station