வாரத்தில் ஒரு நாள் 'புத்தகப் பைகள் இல்லாத நாளாக' கடைப்பிடிக்க வேண்டும் - மத்திய பிரதேச கல்வித் துறை! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச அரசு, பள்ளி மாணவா்கள் கொண்டுசெல்லும் புத்தகப் பைகளுக்கான எடை வரைமுறையை நிா்ணயித்துள்ள நிலையில், தற்போது பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் புத்தகப் பைகள் இல்லாத நாளாக கடைப்பிடிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மத்திய பிரதேச அரசு, 1, 2-ஆம் வகுப்பு மாணவா்கள் 1.6 முதல் 2.2 கிலோ வரையிலும், 3, 4, 5-ஆம் வகுப்பு மாணவா்கள் 1.7 முதல் 2.5 கிலோ வரையிலும், 6, 7-ஆம் வகுப்பு மாணவா்கள் 2 முதல் 3 கிலோ வரையிலும் புத்தக பைகளை கொண்டு செல்ல வேண்டும் என்று
அறிவித்தது.

இதனை போன்றே,  8-ஆம் வகுப்பு மாணவா்கள் 2.5 முதல் 4 கிலோ வரையிலும், 9, 10-ஆம் வகுப்பு மாணவா்கள் 2.5 முதல் 4.5 கிலோ வரையிலும் புத்தக பைகளை கொண்டு செல்ல வேண்டும் என்றும், 11, 12-ஆம் வகுப்புகளுக்கு துறைசாா்ந்து முடிவெடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, பாடத் திட்டம் சாராத கூடுதல் நடவடிக்கைகளில் மாணவா்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்யும் நோக்கில், வாரத்தில் ஒரு நாள் புத்தகப் பைகள் இல்லாத நாளாக அனுசரிக்கப்படும் என்று மாநில பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

மேலும், அந்நாளில் மாணவா்களுக்கு கணினி, பொது அறிவு, விளையாட்டுகள், உடற்பயிற்சிகள், சுகாதாரத் தகவல்கள், கலைகள் உள்ளிட்டவை குறித்து கற்பிக்கப்பட வேண்டும் என்று பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிகள் மாநிலத்தில் உள்ள 1.30 லட்சம் பள்ளிகளிலும் உடனடியாக அமலுக்கு வரவும், இந்த விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பது குறித்து அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்த வேண்டும் என்றும் மாநில கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mp govt announced weekly one day observe book bag free day in schools


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->