பெண்ணின் பிறப்புறுப்பில் கண்ணாடியை... கொடூரமான பாலியல் வன்கொடுமை - இந்திய இராணுவ அதிகாரி கைது! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தில் ராணுவ அதிகாரி ஒருவர், பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து, பிறப்புறுப்பில் கண்ணாடியை திணிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தூர் நகரின் தனியார் ஹோட்டல் ஒன்றில், அசாம் மாநிலத்தில் பணி புரிகின்ற ராணுவ அதிகாரி சஞ்சய் யாதவ் என்பவர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 35 வயது பெண் வங்கி மேலாளர் ஒருவர், நேற்று காலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காவல் நிலையம் வந்த அந்த பெண், நடக்க முடியாமல் வலியில் தள்ளாடியப்படியே வந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். 

இதனை அடுத்து போலீசார் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பெண் போலீசாரிடம் அளித்த புகாரில் பெரும் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அதில், ராணுவ அதிகாரி சஞ்சய் யாதவ் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனக்கு அறிமுகமானதாகவும், தற்போது தன்னுடன் இருந்த அந்தரங்க வீடியோ ஒன்றை காட்டி, மிரட்டி ஹோட்டலுக்கு வரவைத்ததாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் அந்த ஹோட்டல் அறையில் வைத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்த ராணுவ அதிகாரி சஞ்சய் யாதவ், அந்தரங்க உறுப்பில் கண்ணாடி துண்டை நுழைக்க முயற்சித்ததாகவும், அவரிடம் இருந்து தப்பித்து வந்ததாகவும் அந்த பெண் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். 

இதனை அடுத்து போலீசார் உடனடியாக ராணுவ அதிகாரி சஞ்சய் யாதவை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்தப் பெண்ணிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MP Lady Brutal Abuse Case Army Man


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->