உச்ச நீதிமன்றமே சட்டம் இயற்றுமானால் நாடாளுமன்றத்தை மூடி விடுங்கள் - எம்.பி நிஷிகாந்த் துபே.!!
mp nishanth dubey speech about supreme court
உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் வழங்கிய சில உத்தரவுகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க.விற்கு அதிருப்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதில் முக்கியமாக, தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவு எடுக்க காலதாமதம் ஏற்படுத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது.
இதேபோல், மத்திய அரசு நிறைவேற்றிய வக்பு திருத்த சட்டத்திலும் சர்ச்சைக்குரிய சில பிரிவுகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த உத்தரவுகள் மத்தியில் ஆளும் தரப்பை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. இதில் முதல் நபராக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், உச்ச நீதிமன்ற நீதிபதிகளை கடுமையாக சாடினார்.

இந்த நிலையில், ஜார்க்கண்டை சேர்ந்த நிஷிகாந்த் துபே எம்.பி., மறைமுகமாக உச்ச நீதிமன்றத்தை சாடியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 'உச்ச நீதிமன்றமே சட்டம் இயற்றுமானால் நாடாளுமன்றத்தை மூடி விடுங்கள்' என்றுத் தெரிவித்துள்ளார்.
மக்களவையில், பல்வேறு அரசியல் பிரச்சனைகளில் எதிர்க்கட்சிகளை கடுமையாக எதிர்கொள்வதிலும், ஆளும் கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதிலும் முன்னணியில் இருப்பவரான நிஷிகாந்த் துபே, தற்போது உச்ச நீதிமன்றத்தையும் சாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
mp nishanth dubey speech about supreme court