பிறந்த குழந்தை எரிப்பு...தந்தையின் அதிர்ச்சி வாக்குமூலம்...!! - Seithipunal
Seithipunal


சமீப காலமாக தனது குழந்தைகளை பெற்றோர்களே கொலை செய்யும் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. அதுபோல் பிறந்த குழந்தையை பெற்றோரே எரித்து கொன்ற கொடூர சம்பவம் அரியலூரில் அரங்கேறி உள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் காலணி தெருவை சேர்ந்தவர் மதிவண்ணன் (35). இவர் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி  திவ்யா (27). இவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், இவர்களது வீட்டு அருகே கடந்த 7 ஆம் தேதி கொளுத்தப்பட்ட குப்பையில் பிறந்த ஆண் குழந்தை ஒன்று கருகிய நிலையில் இறந்து கிடந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இது குறித்து செந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.         

அப்போது திவ்யாவிடம் விசாரணை செய்தபோது, தனக்கு கடந்த சில மாதங்களாக மாதவிடாய் சரியாக வந்துள்ளதாகவும், ஆனால் வயிற்றில் கட்டி இருப்பதாக நினைத்து மருத்துவம் செய்து வந்ததாகவும், இந்த நிலையில் அன்றைய தினம் இரவு தனக்கு குழந்தை இறந்து பிறந்ததாகவும் கூறியுள்ளார்.
திடீரென குழந்தை பிறந்ததால் சந்தேகப்படுவார்கள் என்று அதிகாலை 5 மணியளவில் தனது உறவினர் ஒருவர் குப்பையை கொளுத்தி கொண்டு இருந்தார்.

அப்போது  யாருக்கும் தெரியாமல் தனக்கு பிறந்த குழந்தையை எரிந்த நெருப்பில் வீசிவிட்டு சென்றதாக கூறியுள்ளார். இந்த நிலையில் போலீசார் அவரை அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்த நிலையில் திவ்யா மற்றும் அவரது கணவர் மதிவண்ணன் ஆகியோரை பிடித்து செந்துறை போலீசார் கிடிக்கி பிடி விசாரணை மேற்கொண்டார்.

அப்போது மதிவண்ணன் கொடுத்த வாக்குமூலம் போலீசாரையே அதிர்ச்சியடைய செய்தது.  தனது மனைவி கற்பமானதை மறைத்து வந்ததாகவும், மாதம் ஆக ஆக வயிறு பெரிதாகி விட்டதால் அது குறித்து கேட்டதற்கு வயிற்றில் கட்டி உள்ளதாக பொய் சொல்லியதாக மதிவண்ணன் கூறினார்.

இந்த நிலையில் வீட்டில் பிறந்த அந்த குழந்தையின் முகம் மற்றும் உருவத்தை பார்த்தபோது யாருக்கோ பிறந்த குழந்தை என்று சந்தேகம் அடைந்தேன். இதனால் இருவருக்கும் இடையே அன்று இரவு சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் குழந்தையை தூக்கி கீழே வீசினேன். இதில் அடிபட்டு குழந்தை அழுதது. அப்போது, அழுகை சத்தம் வெளியே கேட்கக்கூடாது என்பதற்காக திவ்யா துணியால் குழந்தையின் வாயை அடைத்தார். இதனால்  குழந்தை மூச்சுத்திணறி இறந்து விட்டதாக கூறினார்.

அதையடுத்து இறந்த குழந்தையை அருகே இருந்த குப்பை தொட்டியில் போட்டு எரித்து விட்டு வந்ததாகவும், ஆனால் அந்த குழந்தை பாதி மட்டுமே எரிந்ததால், காலை ஊர் மக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் சொல்லிவிட்டனர் என கூறினார். 

போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் இந்த கொடூர கொலை அம்பலம் ஆனது. அதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது கொலை வழக்கை பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்தனர். பின்னர் செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Parents Arrested for Murdering Newborn Baby


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->