நெருங்கும் ஐபிஎல் - வலைத்தளங்களில் வைரலாகும் எம்.எஸ்.தோனியின் வீடியோ.!
ms dhoni intro vedio viral
இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரைக்கும் 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில் இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு வரும் 22ம் தேதி ஆரம்பமாகிறது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி நேற்று சென்னை வந்தடைந்தார். அவரை கவுரவிக்கும் விதமாக சி.எஸ்.கே . நிர்வாகம் ஒரு வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில், போட்டோ பிரேமை அர்ஜூன் சுத்தியலால் அடித்து உடைத்து, விஜய் அறிமுகமாகும் காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அதைப்போல, போட்டோ பிரேமை சுத்தியலால் உடைத்து அதில் தோனி முகம் இருப்பது போன்ற அறிமுக வீடியோவை சி.எஸ்.கே வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
English Summary
ms dhoni intro vedio viral