பின்னோக்கி செல்லும் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை : மருத்துவர்கள் அறிவிப்பு.!
mulayam singh yada health condition
சமாஜ்வாடி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையிலேயே இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக முலாயம் சிங் யாதவ் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அவருக்கு உயிர் காக்கும் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மேதாந்தா மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு மருத்துவ நிபுணர்களைக் கொண்ட மருத்துவக் குழு முலாயம் சிங் யாதவுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், அவர் தொடர்ந்து ஆபத்தான நிலையிலேயே இருந்து வருவதாகவும் மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.
English Summary
mulayam singh yada health condition