கடும் அமளி - நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.!
opposition party create ruckus in parliment
கடந்த 31ம் தேதி முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதையடுத்து நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கின. அப்போது உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தனர்.
இந்த உயிரிழப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் கோரிக்கை வைத்தனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதையடுத்தை அடுத்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
இதனால், மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
English Summary
opposition party create ruckus in parliment