ஆதாரமின்றி கணவரை பெண்கள் பின்னால் சுற்றுபவர் என்று சொல்லகூடாது - மும்பை உய்ரநீதிமன்றம் தகவல்.!
mumbai high court order to husband walks woman behind no evidence
மும்பை உயர்நீதிமன்றத்தில் 50 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர், தனது விவகாரத்துக் குறித்து மேல்முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அவர்களுக்கு குடும்ப நல நீதிமன்றம் விவகாரத்து வழங்கி இருந்த நிலையில், அதை எதிர்த்து இந்த பெண் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த மும்பை உயர்நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது. மேலும், மும்பை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில் முக்கிய கருத்துக்களையும் தெரிவித்துள்ளது.
அந்த உத்தரவில் "ஆதாரங்கள் எதுவும் இன்றி கணவரை பெண்கள் பின்னால் சுற்றுபவர் என்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் கூறுவது கொடூரமானது என்று தெரிவித்துள்ளது.
English Summary
mumbai high court order to husband walks woman behind no evidence