அடுத்த அதிர்ச்சி.. மீண்டும் ஓர் குளியலறை வீடியோ சர்ச்சை.! மும்பை ஐஐடி மாணவிக்கு அசம்பாவிதம்.!  - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாணவிகள் குளியலறை வீடியோ சர்ச்சையை தொடர்ந்து மும்பை ஐஐடி-யில் கேன்டீன் ஊழியர் ஆபாச படம் எடுத்து கைதாகியுள்ளார். 

மும்பை ஐஐடி பல்கலைக்கழகத்தில் ஹாஸ்டல் இரவு உணவக ஊழியர் ஒருவர் விடுதியில் மாணவி குளித்துக் கொண்டிருந்தபோது வீடியோ பதிவு செய்ததாக கூறப்படுகிறது. அவர் தண்ணீர் குழாயில் ஏறியவாறு தனது செல்போனை பயன்படுத்தி குளியல் அறையில் இருந்த இடைவெளியில் வீடியோ எடுத்துள்ளார். 

இதை கவனித்த அந்த மாணவி கத்தி கூச்சலிட்டதை தொடர்ந்து மற்ற மாணவிகள் மற்றும் விடுதி நிர்வாகிகள் விரைந்து வந்து இந்த குற்ற செயலில் ஈடுபட்ட கேண்டின் ஊழியரை பிடித்து அடித்துள்ளனர். அதன் பின்னர், இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விரைந்து வந்து அந்த கேண்டின் ஊழியரை கைது செய்து, பின் சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரித்துள்ளனர். 

பள்ளி ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய மாணவன்!. விசாரணையில்  வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!. - Seithipunal

இதனை தொடர்ந்து தற்காலிகமாக கேண்டீன் மூடப்பட்டுள்ளது. பெண் சமையலற்கள் நியமிக்கப்பட்டவுடன் அந்த கேண்டின் திறக்கப்படும் என்று மும்பை ஐஐடி தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து மும்பை ஐஐடி வெளியிட்டுள்ள தகவலில், "இங்கு படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பிற்கு நாங்கள் பொறுப்பு. 

இவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதை சரி செய்ய வேண்டியது எங்கள் கடமை. இந்த குற்ற செயலில் ஈடுபட்டவருக்கு தக்க தண்டனை கிடைக்கும். மாணவிகளிடம் தகுந்த நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ளலாம், பாதுகாப்பை எவ்வாறு பலப்படுத்தலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்." என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mumbai iit student bathroom video issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->