ஹோலி!ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை!!! வண்ணம் பூசிக்கொள்ள மறுத்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்!!!
Murder by strangulation in anger The tragedy that befell the young man who refused to be painted
ஹோலி பண்டிகை நாடு முழுவதும் இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஹோலி வண்ணம் பூசிக்கொள்ள மறுத்ததால் ஆத்திரத்தில் இளைஞர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் ரால்வாஸ் கிராமத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்த 25 வயது இளைஞர் ஹன்ஸ்ராஜ். இவரை கடந்த புதன்கிழமை மாலை ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் அசோக்,கலுராம் மற்றும் பப்லு மற்றும் ஆகிய மூவர் ஹன்ஸ்ராஜ் மீது கலர் பொடி பூச முனைத்துள்ளனர்.

ஹோலி பண்டிகை:
ஆனால் வண்ணம் பூசிக்கொள்ள ஹன்ஸ்ராஜ் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் உதைத்து, பெல்ட்டால் கண்டபடி விளாசியுள்ளனர்.இதன் உச்சமாக மூவரில் ஒருவன் ஹன்ஸ்ராஜ் கழுத்தை பிடித்து நெரித்து கொலை செய்தான். பின்னர் மூவரும் தப்பியோடினர்.
இதைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சியில் அழுதனர் .இந்நிலையில் ஹன்ஸ்ராஜ் உடலுடன் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் மூவரையும் கைது செய்ய வேண்டுமென நெடுஞ்சாலையில் உடலைவைத்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.
பின்னர் போலீசாரின் உறுதிமொழியை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.இச்சம்பவம் தற்போது பலமாநிலங்களில் பரவி வருகிறது. ஆத்திரத்தில் கொலை செய்பவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டுமென மக்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Murder by strangulation in anger The tragedy that befell the young man who refused to be painted