ராமர் கோவில் கும்பாபிஷேகம் - முக்கிய இடங்களில் 28 மொழிகளில் பெயர்ப்பலகை.!!
name board in 28 languages at uttar pradesh for ramar temple kumbabishegam
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். பா.ஜ.க.வைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என்று சுமார் 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து மக்கள் அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர்கள் வசதிக்கு ஏற்ப 28 மொழிகளில் பெயர் பலகையை அயோத்தி மாவட்ட நிர்வாகம் வைத்துள்ளனர். மேலும், இந்த பலகையில் 28 மொழிகளில் - 22 இந்திய மற்றும் 6 வெளிநாட்டு மொழிகள் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு மொழிகளில் அரபு, சீனம், பிரஞ்சு, ஆங்கிலம், ரஷ்யன் மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்டவை அடங்கும். மேலும், இந்திய மொழிகள் இந்தி, உருது, அசாமி, ஒரியா, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, குஜராத்தி, டோக்ரி, தமிழ், தெலுங்கு, நேபாளீஸ், பஞ்சாபி, பங்களா, போடோ, மணிப்பூரி, மராத்தி, மலையாளம், மைதிலி, சந்தாலி, சமஸ்கிருதம் மற்றும் சிந்தி.
இந்தப் பெயர் பலகைகள் ஹனுமான் கர்ஹி, கனக் பவன், ராம் கி பாடி, அயோத்தி தாம் சந்திப்பு, தேதி பஜார் மற்றும் அயோத்தி விமான நிலையம் ஆகிய முக்கிய இடங்களில் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன, மற்ற நியமிக்கப்பட்ட இடங்களில் அவற்றை நிறுவும் பணிகள் வரும் 22-ம் தேதிக்குள் முடிவடையும் என்று அயோத்தி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
English Summary
name board in 28 languages at uttar pradesh for ramar temple kumbabishegam