தலைகிழாக ஏற்றப்பட்ட தேசியக்கொடி! கொந்தளித்த பாஜகவினர்!
National flag flying upside down incident in Telangana
தெலுங்கானாவில் தலைகிழாக தேசியக்கொடி பறக்கவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி நிலையில் இது தொடர்பாக பாஜக பரபரப்பு புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டம் கஜ்வேல் நகராட்சியில் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் நகராட்சி அலுவலகம் முழுவதும் வண்ண வண்ண தருணங்கள் மற்றும் தேசிய கொடிகள் கட்டப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று 78வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு நகர மன்ற தலைவர் ராஜமவுலி குப்த தேசிய கொடியை ஏற்றினார்.
அப்போது தேசியக்கொடி தலைகீழாக பரப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நகராட்சி ஊழியர்கள் உடனடியாக தேசியக் கொரிய கீழே இறக்கப்பட்டு மீண்டும் சரி செய்யப்பட்டு பறக்கவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையில் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றி அவமரியாதை செய்த அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய தேசிய கொடியை தலைகீழாக பறக்கவிட்டு சம்பத்திற்கு காரணமானவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
English Summary
National flag flying upside down incident in Telangana