ரூ.15 லட்சம் லஞ்சம் - சி.பி.ஐ. போலீசாரிடம் சிக்கிய நெடுஞ்சாலை ஆணைய பொது மேலாளர்.!! - Seithipunal
Seithipunal


இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொது மேலாளராக இருந்து வந்த ராம்பிரித் பஸ்வான் என்பவர் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக காண்டிராக்டை முடித்து கொடுப்பதற்காக ரூ.15 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அதன் படி தனியார் நிறுவனமும் பணத்தைக் கொடுப்பதற்கு தயாராக இருந்துள்ளது.

இது குறித்து சி.பி.ஐ. போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று லஞ்சப் பணம் கைமாறிய போதே, ராம்பிரித் பஸ்வான் மற்றும் தனியார் நிறுவன மேலாளரை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், இந்த லஞ்ச வழக்கில் நெடுஞ்சாலைத் துறையை சேர்ந்த மேலும் 6 உயர் அதிகாரிகளும், தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஏஜெண்டுகள் என்று 12 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீசார் ராம்பிரித் பஸ்வான், தனியார் நிறுவன அதிகாரி உள்பட 4 பேரை கைது செய்தனர். மேலும், இவர்களது காண்டிராக்ட் சம்பந்தப்பட்ட இடங்கள், அலுவலகங்களில் சோதனை நடத்தி ரூ.1.18 கோடி பணம் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

national road commission manager arrested for bribe


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->