நாடு முழுவதும் இன்னும் 3 ஆண்டுக்குள் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் - அஸ்வினி வைஷ்ணவ்! - Seithipunal
Seithipunal


இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் 5ஜி தகவல் தொழில்நுட்ப சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

மேலும், இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,

"இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தொலைத்தொடா்புத் துறை முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில், தொலைத் தொடா்புத் துறையில் ரூ.2.5 லட்சம் கோடி முதல் 3 லட்சம் கோடி வரை முதலீடுகள் குவியும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. 

ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படுகிறதா? விளக்கம் அளித்தார் ரயில்வேத்துறை  அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!!

5ஜி சேவைகளை வழங்குவதற்கான உள்கட்டமைப்புகளை அமைப்பதில் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் 5ஜி தகவல் தொழில்நுட்ப சேவை அறிமுகப்படுத்தப்படும். 

வருகின்ற அக்டோபா் மாதம் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான கம்பிகள் பதிப்பது, சாலைக் கம்பங்கள் அமைப்பது போன்றவற்றிற்கான கட்டணங்களை நிா்ணயிக்கும் விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, 5ஜி உள்கட்டமைப்பு அமைப்பதற்கு நிறுவனங்கள் அனுமதி பெறுவதற்கான காத்திருப்பு காலம் 22 நாள்களாகக் குறைந்துள்ளது". என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nationwide 5G service to be rolled out in 3 years ashwini vaishnav


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->