இரண்டு வயது குழந்தை மீது வழக்கு பதிவு - அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி.! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கடந்த 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. கொரோனாத் தொற்று பரவல் அதிகமாக இருக்கும் இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேறாமல் இருப்பதற்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில், பிகார் மாநிலத்தில் உள்ள பெருசராய் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்ததனால், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தத் தடுப்பு வேலியை உடைத்து சிலர் அரசின் கட்டுப்பாடுகளை மீறியுள்ளனர். அவர்களில் உடைக்கப்பட்ட இந்த வேலியை இரண்டு வயது ஆண் குழந்தை தாண்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தடுப்பு வேலியை உடைத்ததாக எட்டு பேர் மீது போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்த நிலையில், வேலியை தாண்டியதாக அந்த குழந்தை மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

அந்த விசாரணையின் போது குழந்தையை நீதிமன்றத்தில் ஆஜராகுாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தனது குழந்தை மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு அவரது தாயார் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், போலீசார் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குழந்தையின் தாயார் மாவட்ட நீதிமன்றத்தில் தனது குழந்தை மீது பதிவு செய்யப்பட்டுள்ள கிரிமினல் வழக்கை ரத்து செய்து ஜாமின் அளிக்குமாறு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த ஜாமீன் மீதான விசாரணை நடைபெற்றது. 

அப்போது, நேரில் ஆஜரான குழந்தை மற்றும் அவரது தாயாரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதி, குழந்தைக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. இரண்டு வயது குழந்தை மீது வழக்குபதிவு செய்ய வாய்ப்பில்லை. இந்த விவகாரத்தில் போலீசார் தன்னிச்சையாக செயல்பட்டிருப்பது வெளிச்சமாகத் தெரிகிறது.

ஆகவே குழந்தையின் பெயரை கிரிமினல் வழக்கிலிருந்து நீக்குமாறு காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதுமட்டுமல்லாமல், குழந்தை மற்றும் தாயாரை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near bihar police case filed on two years old boy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->