பல்வேறு ஊழல்களால் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விட்டது - தே.மு.தி.க பிரேமலதா பேச்சு.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்கடை பகுதியில் தே.மு.தி.க. குடும்ப விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா கலந்துகொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் தெரிவித்ததாவது, 

"குமரி மாவட்டத்திலேயே வரலாற்று சிறப்பு வாய்ந்த பகுதி என்றால் அது புதுக்கடை பகுதி தான். இந்த குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைவதற்கு முக்கிய களமாற்றிய பகுதியாகவும் இது உள்ளது. அப்படியுள்ள இந்த பகுதியில் உங்களைப் பார்க்கும்போது, எனக்கு ஒன்று தோன்றுகிறது. நீங்கள் அனைவரும் கேப்டன் எப்படி இருக்கிறார் என்று கேட்பது போல் உள்ளது . கேப்டன் மிகவும் சிறப்பாக உள்ளார். இன்று என்னை சென்னை விமான நிலையத்திற்கு வந்து வழியனுப்பி வைத்தார். 

இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது. இந்தக் கூட்டம் நேர்மையானவர்கள், தூய்மையானவர்கள் இருக்கும்  கட்சியினுடைய ஒரு கூட்டம். நீங்கள் இருக்கும் வரை இந்த கட்சியை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. மிகக் குறுகிய காலகட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் என்று பதவியை பெற்ற கட்சி தே.மு.தி.க. தற்பொழுது நாம் தோல்வியை சந்தித்தாலும் மீண்டும் எழுந்து நிற்போம்.

இங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக வந்தபோது போலீசார் இரு சக்கர வாகனங்களில் செல்லக்கூடாது என்று அனுமதி மறுத்தனர். ஆனால், எதற்கு இப்படி செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. அதையும் எதிர்த்து போலீசாரிடம் பேசி நாங்கள் இந்த விழாவை நடத்தி உள்ளோம். நாம் அனைவரும் நல்லவர்களாக இருந்தது போதும், இனிமேல் வல்லவர்களாக மாற வேண்டும். இந்த சமூகம் நல்லவர்களை எளிதில் ஏமாற்றி விடுகிறது. 

இதுமட்டுமல்லாமல், இந்தக் குமரி மாவட்டத்திலேயே வலுபெற்ற  கட்சிகளாக காங்கிரசும், பாஜகவும் உள்ளது. ஆனால், தமிழகத்தில் பல்வேறு ஊழல்களால் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விட்டது. இப்போது இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் கட்சியாக பாஜக உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near kanniyakumari premalatha meeting in puthukadai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->