உங்கள் அநீதிகளுக்கு அளவே இல்லையா உதயநிதி? வைரலான அதிர்ச்சி வீடியோ! வானதி கடும் கண்டனம்!
BJP Vanathi Condemn to DMK Udhay
கடும் வெயிலில் பள்ளி குழந்தைகளை நிற்க வைத்து துணை முதல்வர் உதயநிதிக்கு வாழ்த்து சொல்லவைத்த காணொளி வைரலாகி வருகிறது.
இந்நிலையில், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இதற்க்கு கடும் கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "உங்கள் அநீதிகளுக்கு ஒரு அளவே இல்லையா தமிழக துணை முதல்வர் திரு. உதயநிதி அவர்களே?
தென்காசி மாவட்டம் ஐந்தருவி சாலையில் உள்ள ஒரு பள்ளியில், பள்ளிச் சிறுவர்களை உச்சி வெயிலில் நிற்க வைத்து உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைக் கூறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர் உங்களின் கழக உடன் பிறப்புகள்.
தமிழக மாணவர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து உங்கள் இஷ்டம் போல ஆட்டிப் படைப்பது இது ஒன்றும் முதன்முறையல்ல.
குறிப்பாக உங்களுக்கு தொடர்புடைய நிகழ்வுகளில் மட்டும் தமிழக பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் பணியாட்களைப் போல நடத்தப்படுவதும், தமிழக துணை முதல்வரான நீங்களே இதுபோன்ற அவலங்களைக் கண்டிக்காமல் ஊக்குவிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
உங்கள் தந்தையான தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள், உங்களுக்கு 100/100 மதிப்பெண் வழங்கி அழகுபார்த்தது இதற்குத்தானா?
பிறந்தநாள் வாழ்த்து என்பது அன்பின்பேரில் கிடைப்பது என்பதை மறந்துவிட்டு, வாழ்த்து சொல்லச் சொல்லி பள்ளிக்குழந்தைகளை இவ்வாறு கட்டாயப்படுத்துவது தான் திராவிட மாடல் அரசா?
உங்களின் தற்பெருமையைத் தம்பட்டம் அடித்துக் கொள்ள தமிழக பள்ளி மாணவர்கள் கிடைத்தார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
BJP Vanathi Condemn to DMK Udhay