பூனைக்கு வளைகாப்பு நடத்திய தம்பதி.! வலைத்தளங்களில் வைரல்கும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையை சேர்ந்தவர்கள் வெங்கடரமணசெட்டி - நிர்மலா தம்பதியினர். ஆசிரியர்களாக பணியாற்றி வரும் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பூனை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர்கள் தனது வீட்டில் ஒரு பெண் பூனையை வளர்த்து வந்தனர். அதற்கு சுப்பி என்று பெயர் வைத்துள்ளனர்.

தற்போது அந்த பூனை கர்ப்பமாக உள்ளதனால், கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது போல் அந்த பூனைக்கும் வீட்டில் வளைகாப்பு நடத்தினர். இதற்காக பூனையை குளிப்பாட்டி புதிய ஆடை அணிவித்து, அதற்கு சிறப்பு அலங்காரம் செய்து, வளையலிட்டு, ஆரத்தி எடுத்தனர். பின்னர் பூனைக்கு பிடித்தமான உணவினையும் கொடுத்தனர். இந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தங்களது அக்கம்பக்கத்தினரையும் அழைத்திருந்தனர். 

இதுகுறித்து ஆசிரியர் வெங்கடரமண ஷெட்டி தெரிவித்ததாவது, "எங்களுக்கு பெண் குழந்தைகள் இல்லாததால், பெண் பூனையை சுப்பி என்று பெயர் சூட்டி பாசமாக வளர்த்து வருகிறோம். அந்த பூனை கர்ப்பமாக இருந்தது. அதனால், அதற்கு வளைகாப்பு நடத்தினோம். 

எனக்கு மகள் இருந்தால் எப்படி வளைகாப்பு நடத்துவேனோ அதை போலவே நடத்தினோம். இந்த நிகழ்வு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்றுத் தெரிவித்துள்ளார். மேலும், பூனைக்கு வளைகாப்பு விழா நடத்திய வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த பலரும் தம்பதிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near karnataka cat baby shower function vedio viral in social media


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->