கேரளாவில் பரபரப்பு.! முடிக்காக உயிரை விட்ட இளைஞர்.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் தலைமுடிக்காக சிகிச்சை எடுத்துவந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பயனளிக்காமல் போனதால் சவுக்கு மருத்துவர் தன கரணம் என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் சமீப காலமாக தலைமுடி கொட்டும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்துள்ளார். இந்தப் பிரச்சனைக்காக கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து ரஃபிக் என்ற மருத்துவரிடம் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். 

தொடர்ந்து மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் முடி கொட்டுவது நிற்கவில்லை என்பதனால், மன வேதனையடைந்த பிரசாந்த் தற்கொலை செய்வதற்கு  முடிவெடுத்துள்ளார். அதன் பின்னர் 'மருத்துவர் ரஃபிக் கொடுத்த மருந்துகளால் என்னுடைய புருவத்தில் இருந்த முடி கூட கொட்டிவிட்டது. தன்னைப் பார்ப்பவர்கள் கேலி செய்கின்றனர்' என்று கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதன் பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near kerala young man sucide for hair fall


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->